இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் திருமண தடை நீங்கும்..!

பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்
பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்

Related News