ஜோதிகாவின் இடத்தை கைப்பற்றிய நடிகை சினேகா.. கமல்ஹாசன் படத்தை உதறியதால் புலம்பும் நடிகை..

தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து உலக நாயகன் என்ற பெயரை பெற்றவர் நடிகர் கமலஹாசன். இவர் படத்தில் கால்ஷீட் கிடைக்குமா என்று பல நடிகர் நடிகைகள் ஏங்காதவர்களே கிடையாது. அந்தவகையில் பலர் பிரபலமாகி சினிமாவில் வளம் வருகிறார்கள். கமல் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
2000 ஆண்டுகளுக்கு பிறகு சில படங்களில் மட்டும் நடித்து வசூல் மன்னனாக திகழ்ந்தார். அந்த வகையில் பெரும் ஹிட் கொடுத்த படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.


கமல்ஹாசன், நாகேஷ், கிரேசி மோகன், பிரபு, பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2004 இல் வெளிவந்த படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்கில் உருவானது தான் இப்படம்.
காமெடி கலந்த கமெர்ஷியல் படமாகி வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு லோக்கல் ரவுடி எப்படி மருத்துவப் படிப்பை தொடங்கி, அதில் என்னென்ன சிக்கல்கள் வருகிறது, என்பதை காமெடியாக இயக்கி இருப்பார் இயக்குனர் சரண்.
சமீபத்தில் தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பற்றி பேட்டிகொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் சினேகாவின் பாப்பு என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜோதிகா தானாம். அவரிடம் சென்று படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்து விட்டாராம்.
இதையடுத்து அப்படம் மாபெரும் வெற்றி பெற்றும் வசூலிலும் அள்ளியது. இதில் பாப்புவாக நடித்த சினேகாவின் கெரியரையும் மாற்றியது. சினேகாவின் நடிப்பை பார்த்த ஜோதிகா, அவரை சந்தித்து மிக அற்புதமாக நடித்திருக்கிறீர்கள் என்று வாழ்த்துக்களையும் கூறினாராம் ஜோதிகா.
வேட்டையாடு விளையாடு, தெனாலி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இது போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த படத்தை தவற விட்டு விட்டேன் என்று புலம்பியும் இருக்கிறாராம் ஜோதிகா. தற்போது நடிக்க ஆரம்பித்துள்ள ஜோதிகா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

Related News