மகாலட்சுமி தங்கும் இடங்கள்.. தங்காத இடங்கள் என்ன தெரியுமா..?

லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.
1. சிறந்த ஆற்றல் உடையவர்கள், 2. துணிவுடையவர்கள், 3. கோபம் கொள்ளாதவர்கள், 4. தெய்வ பக்தி உடையவர்கள், 5. செய் நன்றி மறவாதவர்கள், 6. ஐம்புலனை அடக்குபவர்கள், 7.சத்துவ குணத்தை உடையவர்கள், 8.தர்ம வழியில் நடப்பவர்கள், 9. பிறர் மனதை அறிபவர்கள், 10. காலத்தை வீணாக்காதவர்கள்.
11. பசுக்களைப் பராமரிப்பவர்கள், 12. கற்றவர்களை மதிப்பவர்கள், 13. எவற்றையும் தூய்மையாக வைத்திருப்பவர்கள், 14. பொறுமை கொண்டவர்கள், 15. ஊக்கத்தோடு உழைப்பவர்கள், 16. இயற்கையை வளர்ப்பவர்கள், 17. சத்தியம் தவறாதவர்கள், 18. சொன்னபடி நடப்பவர்கள், 19. நேர்மையோடு வாணிகம் செய்பவர்கள், 20. அன்னதானம் செய்பவர்கள். 21. கற்றோர் வழி நடப்பவர்கள், 22. விருந்தின¬ரை உபசரிப்பவர்கள், 23. உள்ளன்போடு நடப்பவர்கள், 24. பெற்றோரை மதிப்பவர்கள், 25. கற்பித்த குருவைத் தொழுபவர்கள், 26. சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர். 27. அகந்தை அற்றவர்கள், 28. பிறர் கஷ்டத்தை துயர் களைபவர்கள், 29.வெள்ளை உடை உடுத்துபவர்கள், 30. பொறாமை கொள்ளாதவர்கள், 31. பகைமை பாராட்டாதவர்கள், 32. துணிவாகச் செயல்படுபவர்கள், 33.பொது நலம் விரும்புகிறவர்கள்,
34. ஊனமுற்றோர்க்கு உதவுபவர்கள், 35. நித்திய கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள், 36. பேராசை கொள்ளாதவர்கள், 37. அழகிய தோற்றம் கொண்டவர்கள், 38. கற்பு நெறி காப்பவர்கள், 39.பிரதிபலனை எதிர் பார்க்காதவர்கள், 40. பிறன்மனை நோக்காதவர்கள். 41. அதிகாலை எழுபவர்கள், 42. நல்ல நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள், 43. இனிமையாகப் பேசுபவர்கள், 44. புன்னகை முகம் கொண்டவர்கள், 45. சங்குகள், 46. மாவிலைகள், 47. யானைகள், 48. ஸ்வத்திகா சின்னம், 49. கண்ணாடி. 50. குங்குமம், மஞ்சள். 51. சந்தனம், பஞ்சகவ்யம், 52.வெற்றிலை, 53.கோலம், 54.திருமண சூர்ணம், 55. கும்பம், தீபச்சுடர் ஒளி, கற்பூர ஜோதி, 56. வாழைமரம், 57. நீதிநெறி வழுவாதவர்கள், 58.வீரம் உடையவர்கள், 59. விவேகம் உடையவர்கள்.
1. கடவுள் நம்பிக்கை யற்றவர்கள், 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்ந்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6.பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்ட வர்கள், 8. கோபம் கொள் பவர்கள்,9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள், 13. இறைச்சி உண்பவர்கள், 14. விருந்தினரை உபசரிக்காதவர்கள், 15. பொய் பேசுபவர்கள், 16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 17. பிறர்மனை விரும்புகிறவர்கள், 18. மனத்துணிவு அற்றவர்கள், 19. அகத் தூய்மை அற்றவர்கள், 20. புறத்தூய்மை அற்றவர்கள்.
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள், 22. ஆணவம் கொண்டவர்கள், 23. சோம்பேறியாய் இருப்பவர்கள், 24. அழுக்கு ஆடை அணிபவர்கள், 25. பகலில் உறங்குபவர்கள், 26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள், 27. பசுக்களை வதை செய்பவர்கள், 28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள், 29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், 30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்.
31. நீரில் கோலம் போடுபவர்கள், 32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள், 33. சந்தியா வந்தனங்கள் செய்யாதவர்கள், 34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள், 35. குலதெய்வத்தை நிந்தனை செய்பவர்கள், 36. கல்வி கற்காதவர்கள், 37. கற்றவழி நிற்காதவர்கள், 38. வீண் சண்டை விரும்புகிறவர்கள், 39. விவேகம் இல்லாதவர்கள், 40. இரக்கம் அற்றவர்கள்.
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள், 42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள், 43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள், 44. திருமணத்தைத் தடை செய்பவர்கள், 45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள், 46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள், 47. பிறரை ஏளனம் செய்பவர்கள், 48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள், 49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள், 50. ஆடையின்றி நீராடுபவர்கள்.
51. எண்ணெய்க் குளியலன்று உறங்குபவர்கள், 52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள், 53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள், 54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள், 55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள், 56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள், 57. கோள் மூட்டுபவர்கள், 58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்.

Related News