ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்... உலக சாதனை படைத்த இந்திய வீரர்..!

சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை கைப்பற்றி அபிமன்யு மிதுன் சாதனை படைத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது இன்று ஹரியானா மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.
இதில் தாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹரியானா அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 194 ரன்களை குவித்தது. அணியின் சார்பில் அதிகபட்சமாக சைதன்யா பிஷ்னோய் 55 ரன்களும், ஹிமான்ஷு ராணா 61 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்த ஆட்டத்தின் போது 19 ஓவர்கள் வரை ஹரியானா அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்திருந்தது. அப்போது கடைசி ஓவரை வீசிய அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை அபிமன்யு படைத்துள்ளார். அதுமட்டுமின்றி ராஞ்சி கோப்பை, சையது முஸ்தாக் அலி, விஜய் ஹாசரே என மூன்று உள்ளூர் தொடர்களிலும் ஹட்ரிக் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

Related News