ஒப்புதல் அளித்தார் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்... பாகிஸ்தான் செல்லும் இலங்கை வீரர்களின் அதிகாரப்பூர்வ விபரம்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் அனுபவமிக்க மற்றும் வலுவான 16 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் அணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒப்புதல் அளித்துள்ளார்.
ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இரண்டு போட்டித் தொடர்களில் பங்கேற்க இலங்கை அணி 2019 டிசம்பர் 08ம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்படும்.
ராவல்பிண்டி (டிசம்பர் 11-15) மற்றும் கராச்சி (டிசம்பர் 19-23) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வீரர்களும் குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆவர்.
இலங்கையின் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக கடந்த 22ம் திகதி பதவியேற்ற 60 வயதான டலஸ் அழகப்பெரும, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான 16 வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அணி விபரம்:
 1. திமுத் கருணரத்னே(அணித்தலைவர்)
 2. ஒஷாடா பெர்னாண்டோ
 3. குசால் மெண்டிஸ்
 4. ஏஞ்சலோ மேத்யூஸ்
 5. தினேஷ் சண்டிமால்
 6. குசால் பெரேரா
 7. லஹிரு திரிமன்னே
 8. தனஞ்ஜெய டி சில்வா
 9. நிரோஷன் டிக்வெல்ல
 10. தில்ருவன் பெரேரா
 11. லசித் எம்புல்டேனியா
 12. சுரங்கா லக்மல்
 13. லஹிரு குமாரா
 14. விஷ்வா பெர்னாண்டோ
 15. கசுன் ராஜித
 16. லக்ஷன் சண்டகன்

Related News