அடிமேல் அடி வாங்கும் திமுக... காவு வாங்கத் துடிக்கும் கருப்பர் கூட்டம்..!

இந்துக்களை இழிவுபடுத்தி திமுக அடிமேல் அடி வாங்கி வருகிறது. இந்நிலையில் கருப்பர் கூட்டம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்து உள்ளது. 
இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய திமுக இளைஞர் அணி நிர்வாகி கைது, துப்பாக்கிச் சூடு வழக்கில் திமுக எம்.ஏல்.ஏ கைது, இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் கருப்பர் கூட்டம் திமுகவிற்கு ஆதரவு போன்ற பிரச்சனைகள் அடிக்கு மேல் அடி விழுவது போல, திமுக தலைமைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
மூக வலைத்தளங்களில், சமீப காலமாக திமுகவுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பிரச்சாரம் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து இந்து மதத்தையும், இந்து கடவுளகளையும் இழிவு படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வரும் கருப்பர் கூட்டம் என்கிற அமைப்பு கந்த கஷ்டி கவசம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே, திமுகவிற்கு ஆதரவாக இந்த கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தவர்கள் என சில புகைப்படங்களுடன் சமூகவலைதளங்களில் பரவி வைரலானதால், திமுக  இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான கட்சி அல்ல, இந்துக்களுக்கு எதிரான கட்சி என நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.
இதைப்போல், தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக அறிக்கையை வெளியிட்டு வரும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்து தலைவலியை அதிகரிக்க செய்துள்ளார், துப்பாக்கியால் சுட்டு, காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கி, தற்போது சிறையில் கம்பி எண்ணி வரும் திமுக எம்.எல்.ஏ ஒருவர். இனி, சட்டம் ஒழுங்கை பற்றி ஸ்டாலின் எப்படி அறிக்கை வெளியிடுவது என்ற யோசனையில் இருக்கிறார் என பேசி வருகிறார்களாம்.
இந்நிலையில், தலைமைக்கு ஏற்பட்டு வரும் தொடர் கலங்கத்தை எவ்வாறு சரி செய்வது என தெரியாமல் கடுமையான தலைவலியில் ஸ்டாலின் தவித்து வருவதாக அரசியல் வட்டாராங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Related News